Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போதுமே தகராறு தான்…. தம்பியின் தலையில் கல்லை போட்டு கொன்ற அண்ணன்…. தென்காசியில் பரபரப்பு…!!

தம்பியின் தலையில் கல்லைப் போட்டு அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ், பாஸ்கர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ராஜேஷ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சகோதரர்கள் இருவருக்கும் திருமணமாகி எதிரெதிர் வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கரின் மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து சென்றதால் அவர் பவித்ரா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான பாஸ்கர் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது பவித்ரா ராஜேஷின் வீட்டிற்குள் ஓடி சென்றுள்ளார். இதனால் அவரை துரத்தி சென்று ஓடிய பாஸ்கரை ராஜேஷ் வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டு கோபத்தில் பாஸ்கரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில்  ரத்த வெள்ளத்தில் கிடந்த பாஸ்கரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பாஸ்கர் உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையும் போலீசார் பாஸ்கரின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பியின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |