Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கால்வாயில் தள்ளிவிட்டு கொன்ற நண்பர்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. தேடுதலில் தீவிரமாக களமிறங்கிய துறைகள்…!!

கால்வாயில் தள்ளி விட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆதியூர் கிராமத்தில் அம்சா வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐ.டி.ஐ படித்து முடித்த பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி தனது மகனை காணவில்லை என அம்சா வேல் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல்போன பிரசாந்தை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் உதயகுமார் என்பவர் பிரசாந்திடம் பணம் கேட்டதும் அதற்கு தன்னிடம் பணம் இல்லை என பிரசாந்த் கூறியதும் தெரியவந்துள்ளது.

அப்போது உதயகுமார் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி இருக்கிறாய் என பிரசாந்திடம் கூறிய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த உதயகுமார் பிரசாந்தை காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து உதயகுமாரை கைது செய்த காவல்துறையினர் கால்வாயில் பிரசாந்தின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்து 5 நாட்களுக்கும் மேல் ஆவதால் காண்டூர் கால்வாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உடல் கிடைக்கிறதா என வனத்துறை தீயணைப்பு துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறை போன்ற துறைகள் இணைந்து கால்வாயில் தீவிரமாக பிரசாந்தின் உடலை தேடி வருகின்றனர்.

Categories

Tech |