முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கட்டில் பின்னும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பால கிருஷ்ணனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் தியாகு என்பவருக்கும் இடையே இடபிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து முன்விரோதத்தை மனதில் வைத்துகொண்டு குடிபோதையில் இருந்த தியாகு பாலகிருஷ்ணனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பால கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான தியாகுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.