முன்விரோதம் காரணமாக வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவகாமி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் முத்துராமன் என்பவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வெளியூருக்கு சென்ற மணிகண்டன் தஞ்சாவூருக்கு வந்ததை சிலர் முத்துராமனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரெட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் மணிகண்டன் சென்று கொண்டிருந்தபோது, முத்துராமன் தனது நண்பர்களுடன் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.
இதில் கோபமடைந்த முத்துராமன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை அரிவாளால் வெட்டி அவரது தலையை துண்டித்துள்ளார். அதன் பின் தலையை கன்னியம்மன் கோவில் முன்பு வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவக்கல்லூரி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தனித்தனியாக கிடந்த தலை மற்றும் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த குற்றத்திற்காக முத்துராமன் மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.