இறைச்சி கடை ஊழியரை கொலை செய்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவடடத்தில் உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவாசகர் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இவர் கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பாலத்தின் அருகில் மாணிக்கவாசகர் சென்று கொண்டிருக்கும் போது முன்விரோத காரணமாக ஒரு மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேல்கல்கண்டார் கோட்டை தெருவில் வசிக்கும் ஸ்ரீநாத்தையும், அண்ணா நகரில் வசிக்கும் ராகேஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 நபர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனை அடுத்து இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கீழ் கல்கண்டார் கோட்டை பகுதியில் வசிக்கும் ராகுல், சச்சின், ஆகாஷ், மற்றும் மூன்று சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.