Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவள் தற்கொலை பண்ணிக்கிட்டாள்” நாடகமாடிய கணவன்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிகோட்டை பகுதியில் விவசாயியான மரேகவுடு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த பாரதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாரதியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மரேகவுடுவை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பாரதிக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்த மரேகவுடு தனது மனைவியை அடித்ததால் பாரதி உயிரிழந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்பின் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக மனைவியை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மரேகவுடு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு மரேகவுடுவின் தம்பியான சூடேஷ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அதன்பின் அண்ணன் தம்பி இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |