Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடையாளம் காட்டிய தாயார்…. நண்பரின் வெறிச்செயல்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

தவறாக பேசியதால் வாலிபர் தனது நண்பரை வெட்டி கொலை செய்து கடலில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காணாமல் போனதாக இவரது தாயார் பஞ்சவர்ணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் சீனிவாசபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒரு ஆணின் சடலத்தை காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது பஞ்சவர்ணம் கரை ஒதுங்கியது தனது மகனின் சடலம் தான் என அடையாளம் காட்டியுள்ளார்.

அதன்பின் காவல்துறையினர் மகேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மகேஸ்வரனின் நண்பரான கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது மது போதையில் நண்பர்கள் இருவரும் பேசி கொண்டிருந்த போது மகேஸ்வரன் கார்த்திக்கை பற்றி தவறாக கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கார்த்திக் மகேஸ்வரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அவரது சடலத்தை கடலில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |