ஐயா அப்துல்கலாம் அவர்கள் பெற்ற விருதுகள் ஏராளம் , அதுகுறித்து நீளும் பட்டியல் .
1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றினார். 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பதவியேற்றார்.
மாணவர்களையும் , இளைஞர்களையும் அவர் சந்தித்த போதெல்லாம் ”கனவு காணுங்கள்” என்று ஒற்றை வாக்கியத்தை விதைத்துச் சென்றவர். தன் வாழ்நாளில் அதிக நேரத்தை மாணவர்கள் இடத்திலேயே கழித்த அப்துல் கலாம் 2015-ம் வருடம் ஜூலை 27-ஆம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சாதனை நாயகனாக திகழ்ந்த அப்துல்கலாம் இளைஞர்களின் கனவு நாயகன் ஆகவே இன்றும் வாழ்ந்து வருகிறார் .
எப்படி பலராலும் புகழப்பட்ட இன்று வரை அனைவரின் மனங்களையும் கவர்ந்தாரோ ? அதே போல அவர் பெற்ற விருதுகளும் ஏராளம். இந்தியாவின் மிகப்பெரிய உயரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையை கலாம் பெற்றார். அவர் பெற்ற விருதுகள் பல .
அப்துல்கலாம் ஐயா பெற்ற விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது