காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கீழ சந்தைப்பேட்டை பகுதியில் குரு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற குரு நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி பாண்டிசெல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன குருவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தெப்பகுளம் பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் வாலிபரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்த போது இறந்து கிடப்பது குரு தான் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குரு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.