உக்ரைன் நாட்டில் எரிந்துகொண்டிருந்த வன விலங்குகள் உயிரியல் பூங்காவில் பரிதவித்து கொண்டிருந்த கங்காருக்களை காப்பாற்றியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ரஷ்ய படைகள் ஒரு மாதத்தை தாண்டி தீவிரமாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கார்கிவ் நகரத்தில் இருக்கும் ஃபெல்மேன் உயிரியல் பூங்காவின் அருகே ரஷ்யப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் பூங்காவை சுற்றிலும் கடும் தீப்பற்றி எரிந்தது.
இதில் விலங்குகள் பரிதவித்து வந்தன. அப்போது ஒரு தன்னார்வலர் உயிருக்கு போராடிய எட்டு கங்காருக்களை பாதுகாப்பாக வெளியேற்றி தன் வாகனத்தில் ஏற்றினார். தற்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பூங்கா நிர்வாகம் இதுபற்றி முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தற்போது அந்த கங்காருக்கள் பாதுகாப்பாக இருக்கிறது.
Are you expecting good news? We have them. Eight kangaroos were evacuated from the Feldman eco-park in Kharkiv region. #StandWithUkraine pic.twitter.com/mwErrzqglH
— Oleksandra Matviichuk (@avalaina) March 26, 2022
விரைவில் எல்லாம் நல்ல நிலைக்கு திரும்பிவிடும் என்று நம்புகிறோம். பூங்கா நிர்வாகத்தின் சார்பாக கங்காருக்களை காப்பாற்றியதற்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறது.