Categories
உலக செய்திகள்

“அடப்பாவி!”.. நூலகத்தில் படிக்க எடுத்த புத்தகத்தை 63 வருடத்திற்கு பின் அனுப்பிய நபர்.. ஆச்சர்ய சம்பவம்..!!

இங்கிலாந்தில் கடந்த 1957 ஆம் வருடத்தில் ஒரு நபர் நூலகத்திலிருந்து படிப்பதற்காக புத்தகம் எடுத்துச் சென்ற நிலையில் 63 வருடங்கள் கழித்து திருப்பியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் 63 வருடங்கள் கழித்து, ஒரு நபர் தான் நூலகத்திலிருந்து படிக்க எடுத்த புத்தகத்தை அந்த நூலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். எனினும் அவர் தன் உண்மையான அடையாளங்களை மறைத்துவிட்டார். அதனால் அவர் யார் என்று தெரியவில்லை. இவ்வளவு தாமதமாக திருப்பி அனுப்பியதே தவறு!

இதை “எப்போதும் செய்யாமல் இருப்பதை காட்டிலும், தாமதமாக செய்வது சிறந்தது” என்று வாக்கியம் வேறு எழுதி அனுப்பியிருக்கிறார். இது குறித்து அந்த நூலகத்தின் நிர்வாகம் தெரிவிக்கையில், வழக்கமாக இது போன்ற தவறுகளுக்கு நூலகத்தில் அதிகபட்சம் 20 டாலர் அபராதம் விதிப்பார்கள். ஆனால் இவருக்கு அபராதத்தை தொடர்ந்து விதிக்கும் பட்சத்தில் 4,722 டாலர் அவர் செலுத்தவேண்டியிருக்கும். இது இந்திய நாட்டின் மதிப்பில் சுமார் 3.5 லட்சம் ரூபாய் ஆகும்.

Categories

Tech |