Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரும்பு கம்பியால் குத்திய நபர்… பழ வியாபாரி பலத்த காயம்… வலைவீசி தேடிவரும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக பழ வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் புளிக்காரத்தெருவில் முகேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பாம்பூரணி பகுதியை சேர்ந்த மதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனைய டுத்து முகேஷ் இராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த மதி முகேஷை தாக்கிய நிலையில் அருகிலிருந்த இரும்பு கம்பியை வைத்து குத்தியுள்ளார். இதில் முகேஷ் படுகாயம் அடைந்துள்ளார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் முகேஷ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மதியை தேடி வருகின்றனர்.

Categories

Tech |