மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மடுகரை முத்து நகர் பகுதியில் வேலாயுதம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து மனைவியை இறந்த வேதனையில் இருந்த வேலாயுதம் தனது மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் மிகவும் மனவேதனையுடன் தவிர்த்துள்ளார்.
இந்நிலையில் திடீரென மது குடித்துவிட்டு மனமுடைந்து அவரது வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் அதிர்ச்சி அடைந்த அவரது மகள்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.