உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டிப்பட்டி பகுதியில் ராசு என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் ராசு மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் விரக்தியில் ராசு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.