Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவ இல்லாம இருக்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கோவையில் பரபரப்பு…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோதிபுரம் கார்டன் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ரம்யாவிற்கும் ராஜேஷிர்க்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு நடந்துள்ளது.

இதனையடுத்து கோபமடைந்த ரம்யா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ராஜேஷ் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |