விவசாய கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் புளியந்தோப்பில் தங்கியிருந்து அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் கொரோனா அச்சம் காரணமாக அடிக்கடி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து உள்ளார்.
இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்ற முத்துக்குமரன் திடீரென அங்கு உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பிரம்மதேசம் போலீசார் முத்துக்குமரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.