உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பால குட்டை பகுதியில் சௌந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உடல் நலக்குறைவால் கடந்த மூன்று மாதங்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைக்கு சென்று சௌந்தரராஜன் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சௌந்தரராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் மயங்கி கிடந்த அவரை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சௌந்தரராஜன் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அந்தியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.