Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அளவில்லாத பாசம்… தாங்க முடியாத இறப்பு… மகளை இழந்த துக்கத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு…!!

மகள் இறந்த துக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அத்த மங்கலம் பகுதியில் சுரேஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலாம்பூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷின் மூத்த மகள், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தனது வீட்டில் இருந்த யாரிடமும் சொல்லாமல் நீலாம்பூர் பகுதிக்கு வந்து தான் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |