சுடுகாட்டில் இருக்கும் தகரக் கொட்டகையில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ராஜகோபால் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ராஜகோபால் ரத்தசோகை வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜகோபால் அப்பகுதியிலுள்ள சுடுகாட்டு தகர கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோத்தகிரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.