மதுவில் விஷம் கலந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் முத்தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவியும் 5 வயது ஆண் மற்றும் 3 வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்தமிழ் செல்வனுக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு முத்தமிழ்செல்வனை கண்டித்து மாலதி அடிக்கடி சண்டை போட்டுவிட்டு அவரது தாயார் வீட்டிற்கு செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
இதேபோல் மாலதி சண்டை போட்டுவிட்டு தனது குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் முத்தமிழ்செல்வன் மாலதியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் மாலதி வர மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த முத்தமிழ்செல்வன் மதுவில் விஷம் கலந்து தற்கொலையில் செய்துகொண்டார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் முத்தமிழ்ச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்தமிழ்செல்வன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.