கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த வாலிபர் கை மற்றும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனுக்கா நத்தம்பகுதியில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பிச்சை மணிக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டது. மேலும் பிச்சைமணி தனது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த பிச்சைமணி தனி நபர் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்று கை மற்றும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் சடலமாக கிடந்த பிச்சைமணியை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக வையம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.