Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எப்போதும் இதே வேலையா போச்சு…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வட மாநில கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமித் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அமித் எப்போதும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த அமித் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

அதன் பின் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவமனையில் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஓசூர் சிப்காட் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |