Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கொடுக்க முடியல…. தச்சு தொழிலாளிக்கு நடந்த துயரம்… தூத்துக்குடியில் சோகம்…!!

கடன் சுமையால் தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாதா நகர் பகுதியில் ராமமூர்த்தி என்ற தச்சு தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பல பேரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடன் தொகையை இவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராமமூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரைப் பகுதியில் ராமமூர்த்தி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்துநகர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |