Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுற…? தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் இவரது இளைய மகனான ஞானவேல் என்பவர் டிரைவராக இருந்து வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சுற்றி திரிந்துள்ளார். இதனால் துரைசாமி வேலைக்கு செல்லுமாறு தனது மகனை கண்டித்துள்ளார். இதனையடுத்து தந்தை திட்டியதால் மன உளைச்சலில் இருந்த ஞானவேல் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஞான வேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |