Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. கோவில் பணியாளரின் விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த கோவில் அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கட்டில் பாறை சந்தைப் பகுதியில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது தலைவலி குணமாகாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த செல்வம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி செல்வத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு செல்வதை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |