காதலித்த பெண் பேசாமல் இருந்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயராஜ் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரும் ஏர்வாடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் விஜயராஜனின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்துள்ளனர். இதானால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில், அவர் குணமாகி மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் விஜயராஜ் தான் காதலித்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த பெண் இவருடன் பேசாததால் மனமுடைந்த விஜயராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் அவரின் தந்தை பால்ராஜ் புகார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.