தாய் கண்டித்ததால் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான முனிராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். அப்போது முனிராஜின் தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனிராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.