Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னால சமாளிக்க முடியல… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த துணி வியாபாரி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கோதண்ட ராமன் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி குமரன் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்த அந்த நபர் ஜாபர்கான் பேட்டை பகுதியில் வசித்து வந்த முருகன் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்த முருகன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார். மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த ஆண்டிலிருந்து கொரோனா ஊரங்கின் காரணமாக தான் வருமானமின்றி தவிப்பதாகவும், அதன் காரணத்தினாலேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |