Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை குடிச்சிட்டு இப்படி கஷ்டப்படனுமா…? வாலிபருக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் முருகேசன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே முருகேசன் பல்வேறு மருத்துவமனைகளில் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தியில் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஓசூர் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |