மது குடிக்க பணம் தராததால் கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டியார்பட்டி ரங்கநாதபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ராமச்சந்திரன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார்.
அப்போது பணம் தர முருகேஸ்வரி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ராமச்சந்திரன் மனைவியின் கண்முன்னே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தளவாய்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.