Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடனால் வந்த தகராறு….. மகனை கண்டித்த பெற்றோர்….. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடன் தொகையை செலுத்துவது தொடர்பான தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செல்லக்கூடபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான கவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதனால் சிலரிடமிருந்து கடன் வாங்கி கவியரசின் தந்தை அவருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக கவியரசு கடன் தொகையை செலுத்தாததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கவியரசு தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கவியரசின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |