பள்ளிக்கூட சமயலறையில் வாலிபர் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள கீரப்பாளையம் பகுதியில் யோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கீழ பாளையத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள சமையல் அறையில் வளாகத்தில் யோகநாதன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.