விஷ மாத்திரைகளை தின்று பொக்லைன் எந்திர உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலையத்தாபாளையம் பகுதியில் பிரகாஷ் என்ற பொக்லைன் எந்திர உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரகாஷ் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விஷ மாத்திரை தின்றுள்ளார். அதன்பிறகு தனது தங்கையை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பிரகாஷ் தான் சாக போவதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பிரகாஷின் தங்கை, தனது கணவர் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பொக்லைன் இயந்திரம் வாங்கியதால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.