வயிற்று வலி தாங்க முடியாமல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா. பழூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான விக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்கி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த விக்கி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.