Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சமாளிக்கவே முடியல” குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. திருச்சியில் பரபரப்பு…!!

வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த குடும்பத்தினர் உணவில் விஷம் கலந்து தின்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஹானா, சஞ்சனா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் கடந்த ஒன்றரை வருடமாக வேலைக்கு செல்லாமல் சுப்பிரமணி வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வருமானம் இல்லாமல் சிரமப்பட்ட சுப்பிரமணி தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து சுப்பிரமணி காலை உணவில் விஷத்தை கலந்துள்ளார்.

அதன்பிறகு விஷம் கலந்த உணவை தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு சுப்பிரமணியும் அதனை சாப்பிட்டுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |