Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேப்பர்ல இதான் இருக்கா…? அதிர்ச்சி அடைந்த மூதாட்டி…. வலை வீசி தேடும் போலீசார்…!!

நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுந்தர வள்ளி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மூதாட்டி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் உங்களுக்கு முதியோருக்கான உதவி தொகை வந்துள்ளதாக கூறியுள்ளார். அதன்பின் அந்த உதவித்தொகை கிடைக்க வேண்டுமானால் நீங்கள் அதிகாரிக்கு முன்பு கையெழுத்துப் போட வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார். அப்போது அந்த மர்ம நபர் மூதாட்டியிடம் தங்க நகையை கழற்றி வைக்க கூறியதால் அதன்படி சுந்தரவள்ளியும் தான் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அந்த மர்மநபரிடம் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து ஒரு பேப்பரில் அந்த நகையை மடித்து மூதாட்டி கையில் கொடுத்த அந்த மர்ம நபர் அதிகாரியை அழைத்து வருகிறேன் என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் சுந்தரவள்ளி தான் வைத்திருந்த பேப்பரை பிரித்து பார்த்தபோது அதில் தங்க சங்கிலி பதிலாக வேர் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் சுந்தரவல்லி உடனடியாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |