Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியுடன் சந்தோசமாக இருக்க…. வாலிபர் செய்த தில்லுமுல்லு வேலை… விசாரணையில் வெளிவந்த அதர்ச்சி தகவல்…!!

காதலியுடன் சந்தோஷமாக இருப்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி வாலிபர் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் படி தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் டெலிவரி செய்யும் உடை அணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற காட்சிகள் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கள்ளிக்குப்பம் பகுதியில் வசிக்கும் ஜோசப் என்பதும், ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருவதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ஜோசப் தனது காதலியுடன் சந்தோஷமாக இருப்பதற்காக அதிக அளவு பணம் தேவைப்பட்டதால், தனது நண்பரான வெள்ளையன் என்பவருடன் இணைந்து மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்கள் 25-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடி ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முயன்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் 25 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்ததோடு, ஜோசப்பை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |