கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் ராஜ கோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை நகரப் பகுதியை சேர்ந்த நண்பர்கள் புருஷோத், அருணாச்சலம். இவர்கள் இருவரும் கஞ்சா புகைத்து கொண்டும், மது அருந்திக் கொண்டும் ராஜகோபுரம் அருகே சுற்றி திரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தனது செல்போனை நண்பர் அருணாச்சலம் எடுத்து சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து செல்போனை வாங்கி தர வேண்டும் எனவும் கூறி புருஷோத் ராஜ கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.