Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லார் கூடயும் சண்டை போட்டாச்சு… ஆரம்பத்துல இருந்தே தகராறு… பேருந்தில் கல்லை வீசிய வாலிபர்…!!

வாலிபர் குடிபோதையில் பேருந்தின் கண்ணாடி மீது கல்லை வீசி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி பஸ் நிறுத்தத்திற்கு பல பேருந்துகள் சென்று வந்துள்ளன. இந்த பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி நோக்கி 14 வழித்தடம் கொண்ட அரசு பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்து பழைய பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பேருந்தை மறுத்துள்ளார். அதன்பிறகு அந்த வாலிபர் பேருந்தில் ஏறி பெண்கள் அமரும் சீட்டில் அமர்ந்து உள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெண் பயணிகள் அவரை வேறு சீட்டுக்கு செல்லுமாறு கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் கூறியதை அவர் கேட்காததால் பெண் பயணிகள் நடத்துனரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன் பின் நடத்துனர் வந்து அந்த வாலிபரை எழுந்திருக்குமாறு கூறியபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசு மருத்துவமனைக்கு முன்பாக உள்ள சோதனை சாவடி அருகே டிரைவர் பேருந்தை நிறுத்தி  விட்டார். இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து எச்சரித்து அனுப்பி விட்டனர். ஆனால் அவர் அங்கிருந்து கிளம்பாமல் சோதனை சாவடியிலிருந்து சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கீழே கிடந்த கற்களை எடுத்து பேருந்தின் மீது வீசி விட்டார். இதில் பேருந்தின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து விட்டது. ஆனால் எந்தவித பயணிகளுக்கும் காயம் இல்லாமல் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூரில் வசித்து வரும் ராஜேஷ் என்பதும், குடிபோதையில் பேருந்தின் மீது கல்லை வீசியதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |