திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியை வற்புறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஜேந்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கஜேந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி உடனடியாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியிடம் நடந்தவற்றை தெரிவித்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.