Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதனால அடிச்சிட்டே இருக்காரு” இளம்பெண் அனுப்பிய ஆடியோ… உறவினரின் பரபரப்பு புகார்…!!

கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கதுரைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும் ஜெயலட்சுமி ஆடியோ பதிவு மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் தனது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்பின் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த விருகம்பாக்கம் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவரின் உறவினரான மகேஷ் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |