Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இவன் தொல்லை தாங்க முடியல…. விசில் அடித்த காதல் வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

பட்டதாரி இளம் பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளம் ஆவடி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 21 வயது இளம் பெண்ணை பார்த்த கனகராஜ் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது அங்கு சென்ற  கனகராஜ் விசில் அடித்தும் சைகை செய்தும் அந்த இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து நடந்த அனைத்து சம்பவங்களையும் அவர் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |