போலியான பாஸ்போர்ட் மூலம் ஒருவர் மலேசியா சென்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமானநிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மலேசியாவில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குடிமைபிரிவு அதிகாரிகள் இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் நைனார் முகமது என்பவர் போலியான பெயரில் பாஸ்போர்ட் பெற்றதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இவர் போலியான பாஸ்போர்ட்டை பயன்படுத்தி மலேசியாவிற்கு சென்று அங்கு பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்ததும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.