Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தப்பு பண்ணிட்டேன்”… மனைவியை கத்தியால் குத்திய கணவர்… மன உளைச்சலில் செய்த செயல்…!!

மனைவியை கத்தியால் குத்திய கணவர் மனமுடைந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதப்பூர் மகாகாளியம்மன் கோவில் வீதியில் கௌரிசங்கர் பானுப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருகின்றனர். இந்நிலையில் காய்கறி வியாபாரியான கௌரிசங்கருக்கும், அவரது மனைவி பானுப்பிரியாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் இவர்களுக்கும் இடையேயான பிரச்சனை நீடித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே மறுபடியும் தகராறு ஏற்பட்ட போது, கோபமடைந்த கௌரிசங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவியை சரமாரியாக குத்தினார்.

இதனால் பலத்த காயமடைந்த பானுப்பிரியாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் பானுப்பிரியாவை கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் கோபத்தில் அறியாமல் மனைவியை கத்தியால் குத்திவிட்டோமே என்று மன உளைச்சலில் தவித்த கௌரிசங்கர் திடீரென அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ளவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |