சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி அப்பகுதியில் உள்ள வாழை தோப்பிற்கு சென்று பார்த்துள்ளனர். இதனை அடுத்து சட்ட விரோதமாக அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்
. அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்ததோடு, அவளிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.