அமெரிக்காவில் வெட்டப்பட்ட தன் ஒரு கையை மற்றொரு கையில் வைத்துக்கொண்டு அலறியடித்தபடி ஓடி வந்த நபரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் இருக்கும் Lewiston என்னுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தையில் பணியாற்றிய நபர் திடீரென்று அலறியடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறார். மேலும் அவரின் கையில் வெட்டப்பட்ட அவரின் மற்றொரு கையை வைத்திருந்திருக்கிறார். இதைப்பார்த்த பொதுத்துறை ஊழியர்கள் இருவர் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பொதுத்துறை பணியாளர்கள் தகுந்த நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்ததால் உயிர் பிழைத்தார். அதாவது, உலோகம் வெட்டக்கூடிய மின்சார ரம்பத்தை வைத்து, அவர் வேலை செய்தபோது ரம்பத்தில் அவரின் கை மாட்டி, தோள்பட்டைக்கு கீழ் உள்ள பகுதி துண்டானது.