Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாங்க கொடுத்த பணத்தை தாங்க…. அலுவல ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மன அழுத்தம் காரணமாக கல்லூரி அலுவலக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் பகுதியில் குமார் வேதமாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஞானசெல்வம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பீனா குமாரி என்ற மகளும், ஷிபுகுமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புஅவரது மகளான பீனாகுமரியின் திருமணத்திற்காக கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவர் வேலை பார்க்கும் கல்லூரியில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக குமார் வேதமாணிக்கம் சம்பளம் வாங்காததால் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியவில்லை. இதனால் குமார் வேதமாணிக்கம் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனையடுத்து குமார் வேதமாணிக்கம் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மன அழுத்தத்திலிருந்த குமார் வேதமாணிக்கம் இரவு நேரத்தில் அனைவரும் தூங்கி கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குமார் வேதமாணிக்கத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் குமார் வேதமாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குமார் வேதமாணிக்கத்தின் சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |