மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உப்புப்பேட்டை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக பாலாஜி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாலாஜி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.