Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென கீழே விழுந்த வாலிபர்…. சிகிச்சை பலனின்றி பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென வீட்டில் மயங்கி கீழே விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனின் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |