தாயை இழந்த துக்கத்தால் மனமுடைந்து மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
திருவள்ளூர் மாவட்டம் பருவதராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று இவரின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் தன் தாயை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார்.
இதன் பிறகு அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .